15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: 2 பேர்க் கைது
15year old schoolgirl pregnant 2 arrested
திருப்பதி மாவட்டம் வெங்கடாகிரி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய வழக்கில் இரண்டு இளைஞர்களைப் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்குச் சில மாதங்களாக உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தாய் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனார். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக்ரப்பானி(38), சீனபாபு(33) ஆகிய இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
அதனை அடுத்து இரண்டு குற்றவாளிகளையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
English Summary
15year old schoolgirl pregnant 2 arrested