சோகத்தில் திரையுலகம் - பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!  - Seithipunal
Seithipunal


சோகத்தில் திரையுலகம் - பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! 

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பாபா" திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், சூர்யாவின் பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்தவர். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ.துரை கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலும் அதனைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திலும் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே அவர் கடந்த மார்ச் மாதம், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு உதவ வேண்டும் என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்து பல பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்த நிலையில், வி.ஏ.துரை நேற்று இரவு 9 மணியளவில் காலமானார். இவருக்கு இரண்டு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல  திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinime producer v a durai passed away


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->