நடிகை அபர்ணா பாலமுரளி மீது கைபோட்ட கல்லூரி மாணவர்.! வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!
college student misbehavers to actor abarna balamurali in kerala
பிரபல மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
இதைத்தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான "சூரரைப் போற்று" என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதுமட்டுமல்லாமல், இவருடைய நடிப்புக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் வித்தியாசமான கதையைக் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நடிப்பில் தற்போது தங்கம் என்கிற மலையாள படம் தயாராகி உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி திரைக்கு வர இந்தப் படத்தை சஹீத் அராபத் இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புரமோஷனுக்காக படக்குழுவினர் கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் கலந்துகொண்டபோது மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்து திடீரென கையை பிடித்துள்ளார்.
அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் அபர்ணா தோள்மீது கையை போட்டுள்ளார். இதை விரும்பாத அவர் மாணவரிடம் இருந்து விலகி மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, மேடை ஏறி வந்த அந்த மாணவர், தான் தவறாக நடந்துகொள்ளவில்லை. உங்களின் தீவிர ரசிகனாக உங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தான் நான் வந்தேன் என்று விளக்கம் அளித்து, மீண்டும் அவருக்கு கைகொடுப்பதற்கு முயன்றார்.
ஆனால், அபர்ணா அந்த நபருக்கு கைகொடுப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
English Summary
college student misbehavers to actor abarna balamurali in kerala