சென்னையில் வரும் 25 ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து - காரணம் என்ன?
coming 25th all cinema shootings cancelled in chennai
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு, மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வரும் 25ஆம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் சென்னையில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவதே இல்லை. இதனால், சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25ஆம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் நடைபெறாது” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 25th all cinema shootings cancelled in chennai