களைகட்டியது பாலமேடு ஜல்லிக்கட்டு...காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்! - Seithipunal
Seithipunal


மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் 1,100 காளைகள், 910 வீரர்களும் பங்கேற்றுஉள்ளனர்.

உலக அளவில் பிரசித்திபெற்ற மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த  ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் 1,100 காளைகள், 910 வீரர்களும் பங்கேற்றுஉள்ளனர்.

 தொடர்ந்து, காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன.ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு , 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தநிலையில் அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விட அவற்றை மாடு பிடி வீரர்கள் உற்சாகத்துடன் பிடித்து வருகின்றனர்.

 10 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு  உள்ளனர்.

 மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள். டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.முதல் இடம் பிடிக்கும் காளைக்கு டிராக்டர் பரிசும், முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசும் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palamedu Jallikattu Bulls fight with bulls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->