ஆபாசமாக நடித்திருப்பதாக சர்ச்சை... நடிகை அபிநயா விளக்கம்! - Seithipunal
Seithipunal


அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு என ஆபாசமாக நடித்திருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை அபிநயா விளக்கமளித்து முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

 நாடோடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அந்த நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் அவர் நடித்திருப்பார்.

அந்த  நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் இவர் நடித்து  நடிகை அபிநயா பிரபலமானார் . இதையடுத்து தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார் நடிகை அபிநயா .

இந்தநிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பணி எனும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிகை அபிநயா நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மிகவும் ஆபாசமாக நடித்திருப்பதாகவும், இது போன்ற காட்சிகளில் இவர் நடித்திருக்கக் கூடாது எனவும் அபிநயாவை பலரும் குறை கூறினார்கள்.

இந்த நிலையில் ஆபாசமாக நடித்திருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்து செய்கை மொழியின் மூலம் பேட்டி கொடுத்த நடிகை அபிநயா, விளக்கமளித்து முற்றுப்புள்ளிவைத்துள்ளார். அப்போது "செய்கை மொழியின் மூலம் பார்த்தபோது அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு என்றும்  அதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை எனவும்  பணி படத்தை இயக்கிய ஜோஜு ஜார்ஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்றும்  புகழ்பெற்ற நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது" எனக் அபிநயா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy over pornography Actress Abhinaya Explained


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->