இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் - எப்போது தெரியுமா?
lunar eclipse in coming 14th
வனத்தில் பல்வேறு வகையான அரிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று சந்திர கிரகணம். இந்த கிரகணம் தோன்றும் காட்சியை பலரும் பார்த்து ரசிப்பார்கள். அதாவது, சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரகிரகணம் ஏற்படும்.
இந்த நிகழ்வின் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். அப்போது பூமியின் வளிமண்டலம் குறுகிய அலை நீள நீல ஒளியை வடிகட்டும். சந்திரன் பூமியின் நிழலுக்குள் இருக்கும். இந்த சமயத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இதை 'ரத்த நிலா' என்பார்கள். இந்த நிலையில், இந்த ரத்த நிலா வருகிற 14-ந்தேதி தோன்றுகிறது.
இந்திய நேரப்படி, சந்திர கிரகணம் காலை 9.27 மணிக்கு தொடங்கி மதியம் 12.28 மணிக்கு உச்சத்தை அடைந்து மாலை 3.30 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணத்தை அண்டார்டிகாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி, மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா, வடக்கு ஜப்பான், கிழக்கு ரஷியா முழுவதும் பார்த்து ரசிக்கலாம். முழு சந்திர கிரகணம் 65 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.
இதே அரிய நிகழ்வை இந்தியாவில் காண்பதற்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ரத்த நிலவு இந்தியாவில் தெரியும். இந்த நிகழ்வு அன்றைய தினம் அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.52 மணி வரை நீடிக்கும். முழு சந்திர கிரகணமாக ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடிக்கும். அப்போது இந்த சந்திரகிரகணத்தை தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளிலும் தெளிவாக பார்க்கலாம்.
English Summary
lunar eclipse in coming 14th