"அடேங்கப்பா.! குக் வித் கோமாளி காளையனா இது.?! ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்  நெகிழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர் திரைப்பட நடிகர் காளையன். இவர் ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

முக்கியமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர்  பேட்ட படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்திலும்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 4ல்  போட்டியாளராக கலந்து கொண்ட இவர் கடந்த வாரம் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஒவ்வொரு வாரமும் புதிய வகை காமெடிகளை ட்ரை பண்ணாமல்  எப்போதுமே புகழ் மற்றும் குரேஷியை தூக்கிப்போட்டு பந்தாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் 10 வருடங்களுக்கு முந்தைய தனது புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி இருக்கின்றன. காளையனா இது.? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் ஃபிட்டாக பாடி பில்டிங் தோற்றத்தில் இருக்கிறார் காளையன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook with comali fame kalayan surprise social media with his 10 year back pictures


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->