"குக் வித் கோமாளி 'வெங்கடேஷ் பட்' வாழ்வில் நடந்த மறக்க முடியாத நெகிழ்ச்சி சம்பவம்".! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்பான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னணியில் இருக்கும் இந்த நிகழ்ச்சியினை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.

சின்னத்திரை பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாகவும் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு அமர்க்களப்படுத்தி வருகின்றனர். நான்கு வருடங்களாக விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி  கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமோதரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களில் நடுவர் வெங்கடேஷ் பட்டு பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்போது இவரது வாழ்க்கையில் நடந்த  நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. வெங்கடேஷ் பட் மற்றும் அவரது மனைவிக்கு திருமணமாகி  ஏழு ஆண்டுகள் கழித்து தான்  குழந்தை பிறந்திருக்கிறது. தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே  குழந்தைக்காக தன்னிடமிருந்த மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை கைவிட்டு இருக்கிறார் வெங்கடேஷ் பட் .

மேலும் குழந்தை பிறந்தால் திருப்பதியில்  பெருமாளை முதலில் பார்த்து விட்டு தான் குழந்தையை பார்ப்பேன் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் அவர். குழந்தை பிறந்து பத்து நாட்களுக்கு கோவிலுக்குள் போக கூடாது என்ற கட்டுப்பாடு  இருப்பதால்  குழந்தை பிறந்து பத்து நாட்கள் கழித்து பெருமாளை பார்த்துவிட்டு 11-வது நாள் தான் தனது குழந்தையை பார்க்கச் சென்று இருக்கிறார்  வெங்கடேஷ் பட். ஏழு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை பார்க்க 11 நாட்கள் வெங்கடேஷ் பட் காத்திருந்ததை  மகிழ்ச்சியுடன் வைரல் செய்து வருகின்றனர்  சின்னத்திரை ரசிகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook with comali venkatesh butt unforgettable life event


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->