கூல் சுரேஷ் அண்ணே.! புகழையும் விட்டு வைக்கலையா.? திருமண வரவேற்பில் கலாட்டா.!
cool suresh in pukazh marriage
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பங்கேற்று வெள்ளி திரையில் கால் பதித்து முன்னேறும் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் புகழ்.

இவரது நகைச்சுவையான, துடுக்குத்தனமான பேச்சு நிறைய ரசிகர்களை ஈர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் புகழுக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர். இதனால், ஏற்பட்ட பிரபல தன்மையால் அவருக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில் எதற்கும் துணிந்தவன், வலிமை, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக சில படங்களில் புகழ் நடித்த வருகிறார். இவர் தனது நீண்ட நாள் காதலியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்த நிலையில், அவர்களது வரவேற்பு இன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட கூல் சுரேஷ் வழக்கம்போல அங்கேயும் தனது வேலையை காட்டியுள்ளார்.
எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரமோஷன் செய்து வரும் அவர் புகழின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு, "வெந்து தணிந்தது காடு மாப்பிள்ளை பொண்ணுக்கு வணக்கத்தை போடு." என்ற வாசகத்தை ஒரு நோட்டீஸில் எழுதி காட்டி மேடையில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cool suresh in pukazh marriage