சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்.!
foreign thigs seized in chennai port
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி அதிகாரிகள் துறைமுகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ.18.2 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், பொம்மைகள், சீன பட்டாசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் வெளிநாட்டு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு காரணம் என்ன? பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
foreign thigs seized in chennai port