திரைப்படங்களில் கேப்டனின் பாடலுக்கு காப்புரிமை?....பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கும் நிலையில், நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Copyright for Captain's song in movies Do you know what Premalatha Vijayakanth said


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->