மறைந்த பின்பும் "பிறர் வாழ்வில் ஒளி ஏற்றிய" நடிகர் டேனியல் பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


வேட்டையாடு விளையாடு காக்க காக்க பொல்லாதவன் வடசென்னை உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர் மனதில் நீங்காத இனம் பிடித்த டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சை கை கொடுக்காமல் டேனியல் பாலாஜி மரணம் அடைந்தார். வெறும் 48 வயதாகும் டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டேனியல் பாலாஜியின் மறைவு ஏற்க முடியவில்லை என சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கண்ணீர் மல்க பதிவிட்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட டேனியல் பாலாஜியின் உடலுக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன் கௌதம் மேனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே டேனியல் பாலாஜி தனது கண்ணை தானம் செய்திருந்த நிலையில் அவரது இல்லத்திற்கு வந்த மருத்துவர்கள் டேனியல் பாலாஜியின் கண்களை தானமாக பெற்றனர். வில்லன் நடிகராக பிரபலமாகி பிறர் வாழ்விலும் ஒளியேற்றியிருக்கிறார் மறைந்த டேனியல் பாலாஜி. இன்று மாலை அவரது உடல் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daniel balaji eyes are donated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->