95-வது ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளராக தீபிகா படுகோன்.! குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 12ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி தியேட்டரில் 95வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விருது விழாவில் தொகுப்பாளர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 

எமிலி பிளண்ட், சாமுவேல் எல் ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஜோ சல்டானா, ஜெனிபர் கான்னெல்லி, ரிஸ் அகமது மற்றும் மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட தொகுப்பாளர்களுடன் தீபிகா படுகோன் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் முதல் தொகுப்பாளர் நடிகை தீபிகா படுகோன் இல்லை. இதற்கு முன்பாக 1980 இல் 'பெர்சிஸ் கம்பட்டா' ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். 

இவருக்கு பின்னர் 2016 இல் 88வது அகாடமி விருதுகளில் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது நடிகை தீபிகா படுகோனுக்கு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deepika Padukone in 95th Oscar presentation list


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->