"பழசையெல்லாம் மறந்துட்டாரு போல..." சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர் இயக்குனர் செல்வராகவனின் தம்பி ஆவார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களின் அசுர வெற்றியின் மூலம் மூன்று படங்களிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக  உயர்ந்தவர்.

தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ஹாலிவுட் என  கலக்கிக் கொண்டிருக்கிறார். வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். பிரபல சினிமா  பத்திரிக்கையாளரான வலைப்பேசு அந்தணன்.

அந்த செய்தியில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான சூட்டிங் தென்காசியில் வைத்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கும் கேரவன் நிற்கும் இடத்திற்கும்  இடைப்பட்ட தூரம் நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும் ரசிகர்களின் தொல்லை காரணமாக  தனுஷ் சென்றுவர இனோவா காரை ஏற்பாடு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் தனக்கு ஆடி கார் தான் வேண்டும் என தயாரிப்பாளரிடம் பிரச்சனை செய்திருக்கிறார் தனுஷ் . இதனைத் தொடர்ந்து சூட்டிங் இல் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டாராம்.

பின்னர் தயாரிப்பாளரும் இயக்குனரும் சென்று சமாதானம் பேசி அவரை மீண்டும் சூட்டிங்க்கு அழைத்து வந்துள்ளனர். ஒரு காலத்தில்  கடன் வாங்கி எடுத்த படம் எல்லாம் தோல்வி படமாக அமைய  சொந்த ஊருக்கே திரும்ப இருந்த நிலையில்  கடைசி முயற்சியாக செல்வராகவன் இயக்கத்தில் தனுசை வைத்து  துள்ளுவதோ இளமை படத்தை எடுத்து  அந்த வெற்றியின் மூலம் கடனை எல்லாம் அடைத்தார் கஸ்தூரிராஜா. இதுதான் அவர்களின் குடும்ப வரலாறு. தனுஷ் நடந்து கொள்ளும் விதம் இதையெல்லாம் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது என தெரிவித்திருக்கிறார் அந்தனன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush demands an audi car for walkable distance shocks producer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->