கடும் அவதியடைந்த பக்தர்கள்: தனுஷ் படப்பிடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடைபெற்றதால் திருப்பதி மலைக்குச் சென்ற பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள் வேறு சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. 

மாற்று சாலை குறுகளாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன் பிறகு பட குழுவினர் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் முன்பு படபிடிப்பை நடத்த முற்பட்டனர். 

இதனால் அங்கிருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளர், திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு போன்றவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்ட் அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush film shooting cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->