தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒரே அப்டேட்.. 2 அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். 

இவர் நடித்த ஆடுகளம், புதுப்பேட்டை, வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு நன்முறையில் அனைவராலும் கவரும் அளவிற்கு இருக்கிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். 

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார்.மேலும் இந்த திரைப்படத்தில், சந்தீப் கிஷான் மற்றும் நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். 

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை 10.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மாலை 4 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனவும், டீசர் ஜூலை மாதம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush in captain Miller movie 1st look and teaser update announced


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->