தனுஷின் ''ராயன்'' திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட்!
Dhanush movie first song update
நடிகர் தனுஷ் அவரே தனது 50வது திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ''ராயன்'' என பெயரிடப்பட்டுள்ளது.
செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், தூஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ''ராயன்'' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Dhanush movie first song update