டெல்லியில் சட்டசபை தேர்தல்; வாக்குப்பதிவுகள் நிறைவு; 57.70 சதவீத வாக்குகள் பதிவு..!
Assembly elections in Delhi complete
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 07 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 06 மணியுடன் நிறைவுப்பெற்றுள்ளது. இதற்கிடையே, இடைத்தேர்தலில் மாலை 05 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், முதலமைச்சர் அதிஷி, முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
English Summary
Assembly elections in Delhi complete