தமிழகத்தில் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காதா? அண்ணா தொழிற்சங்கம் விடுத்த எச்சரிக்கை!
Tamilnadu Govt Bus anna tholil sangam
கடந்த 2 நாள்களுக்கு முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தின் இந்த கூட்டத்தில் அதன் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் சங்கங்களும் கலந்து கொண்டன.
கூட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளாக ஊதியக் குழு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழக்காதது குறித்து போக்குவரத்துத் துறை செயலரை சந்திக்க அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் முடிவு செய்து இருந்தார்.
அதன்படி சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டியை அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சந்தித்தனர்.
சந்திப்பின் போது ஊதியக் குழு பேச்சுவார்த்தை தொடர்பான மனுவை அளித்தனர். மேலும், வரும் பிப். 10-க்குள் ஊதியக்குழு பேச்சுவார்த்தை நடத்தவிட்டால் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
English Summary
Tamilnadu Govt Bus anna tholil sangam