ரட்சிதாவுடன் விவாகரத்தா.? ஓபனாக பேசிய கணவர் தினேஷ்.!
dinesh open talk about divorce with rakshitha
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நடிகை ரட்சிதா தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற போவதாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த நிலையில், தற்போது தினேஷ் இது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், "எங்களது வாழ்க்கை அசாதாரணமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதை எப்படியோ கடந்து போய் கொண்டிருக்கிறேன்.
ரட்சிதா என்னைவிட தைரியசாலி. எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். சமீபத்தில் கூட அவரை மீம் கிரியேட்டர்கள் மோசமாக காயப்படுத்தினார்கள். அதையெல்லாம் அவர் கடந்து வந்துவிட்டார்.
அவரது வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. மீடியாவில் நாளுக்குநாள் எங்களைப் பற்றி பார்க்கும் செய்திகளை காமெடியாகத்தான் எடுத்துக் கொள்கிறோம்.
கணவன் மனைவி இடையே சண்டை நடந்தால் இருவரும் சிறிது நாட்கள் விலகி இருப்பார்கள். இது அனைத்து குடும்பங்களிலும் நடப்பது தான். அதனால் நாங்கள் விவாகரத்து செய்யப் போகிறோம் என்பது அர்த்தமாகாது. இந்த பிரிவு தற்காலிகமானது." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dinesh open talk about divorce with rakshitha