BREAKING : மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இழுபறி!
Breaking aharashtra assembly elections drag on
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில், 20-ம் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக காங்கிரஸ் இடையே தற்போது இழுபறி நீடித்து வருகிறது. அதன் படி, பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் சம பலத்துடன் 10 தொகுதிகள் வித்தியாசத்தில் உள்ளது.
அவை பின்வருமாறு : பாஜக - 134
காங்கிரஸ் - 126
வாக்குப்பதிவு எண்ணப்படுவதால் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
English Summary
Breaking aharashtra assembly elections drag on