ஆந்திராவில் அதிர்ச்சி!...செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம், அன்னமயா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை அடுத்த எஸ்.ஆர். பாளையம் வனப்பகுதியில், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு உத்தரவின் பேரில், செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்  தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோல்லமடுகு பீட் பகுதி அருகே ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி தோளில் சுமந்து சென்ற நிலையில், அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் சிலர் தப்பியோடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்தனர்.

போலீசாரிடம் பிடிபட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில், அவர்களிடம் இருந்து 8 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, திருப்பதிக்கு எடுத்துச் சென்றனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடியவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in andhra pradesh 2 people from tamil nadu who were involved in sheep smuggling were arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->