இந்திய ஆப் ஸ்டோரில் "எக்ஸ்" முதன்மையான செய்தி செயலி - எலான் மஸ்க்! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 3.6 லட்சம் கோடி) எலான் மஸ்க் கடந்த  2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சொந்தமாக்கினார். டிவிட்டரை வாங்கியதுடன் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதுடன், நீலக் குருவி கொண்ட லோகோவை மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில், இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம், இந்தியாவின் ஆப் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலியாக எக்ஸ் பயன்பாட்டில் உள்ளது என்றும்,  எக்ஸ் தளத்தில் ஒரு புதிய அம்சத்தைய வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னதாக, டாட்ஜ் டிசைனர் பயனர் ஒருவர் பிரெக்கிங் நீங்கள் இப்போது ரீவைண்ட் செய்யலாம் என்று எக்ஸ் தளத்தில் நேரடி வீடியோவை  பதிவிட்ட நிலையில், எலான் மஸ்க் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

X is the number one messaging app in the Indian app store elon musk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->