ஜவான் படம் பண்ணவே தளபதி தான் காரணம் - மேடையில் போட்டுடைத்த இயக்குனர் அட்லீ.! - Seithipunal
Seithipunal


ஜவான் படம் பண்ணவே தளபதி தான் காரணம் - மேடையில் போட்டுடைத்த இயக்குனர் அட்லீ.!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவருடைய இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. 

இந்தப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் 'ஜவான்' படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ, 'ஜவான்' படம் நடப்பதற்கு முக்கிய காரணம் என்னோட அண்ணன்; என்னோட தளபதி; விஜய் சார்தான். என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படம் நீ தான் பண்ணனும்னு விஜய் அண்ணா சொன்னாரு. 

எந்திரன் படத்தோட ஷூட்டிங்ல ஷாருக்கான் சார் வீட்டு கதவு கிட்ட போட்டோ எடுத்தேன். அந்தக் கதவு மீண்டும் எனக்காக திறந்துச்சு. வெல்கம் அட்லி சார்னு என்னைய ஷாருக் வெல்கம் பண்ணினாரு. நான் 6 மாசத்துல படம் பண்ணி, 7-வது மாசம் ரிலீஸ் பண்ணிடுவேன். இது எல்லாமே தளபதியால தான். 

இந்த படம் நடக்கும் போது கொரோனா வந்துருச்சு. நம்ம தளபதியோட பேன், சொன்ன சொல்ல காப்பாத்தணும். படத்துக்கு கதாநாயகி யார்? என்று வரும்போது எனது டார்லிங் நயன்தாரா வந்தார். இப்போது அவர் கேரளாவில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை." என்று மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director atlee speech in javan movie audio launch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->