இரண்டு வார சிகிச்சைக்கு பின் இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பினார்.! - Seithipunal
Seithipunal


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜா இன்று வீடு திரும்பினார். 

இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் தி.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஐஸியுவில் வைக்கப்பட்டு பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

அத்துடன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறினர். பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில், இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Bharathi Raja returns to home


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->