மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்..8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும்  நிா்மலா சீதாராமன்! - Seithipunal
Seithipunal


 நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில்  இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

மிகவும் பரபரப்புக்கு மத்தியில் 2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில்  இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். இதையடுத்து 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.அதேபோல  மேல்சபையில் இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த விவாதங்களுக்கு பிப்ரவரி 6-ம்தேதி பிரதமா் நரேந்திர மோடி மேல் சபையில் பதில் அளிப்பாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு கட்டங்களாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி 9 அமா்வுகளுடன் பிப்ரவரி 13-ந்தேதி முடிவடைகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 10-ந்தேதி துவங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமா்வுகள் இடம்பெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி வரம்பு குறித்த எதிர்பார்ப்பு மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருக்கிறது. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Budget Session begins today Nirmala Sitharaman presents Budget 2019 for the 8th time


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->