காலை உணவு திட்டம்: தனியாருக்கான ஒப்பந்த அறிவிப்பு ரத்து-  சென்னை மாநகராட்சி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று  பெருநகர சென்னை மாநகராட்சிமேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ்  பெருநகர சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்த கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்தநிலையில்  அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று  பெருநகர சென்னை மாநகராட்சிமேயர் பிரியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corporation cancels private tender for breakfast scheme


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->