இயக்குனர் சேரனின் டிவிட்டுக்கு பதில் கொடுத்த இளைஞர்! அதற்க்கு சேரன் கொடுத்த சிறப்பான பதில்!
director cheran twit for mattu pongal
மாட்டு போன்களை முன்னிட்டு இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழர் திருநாள்.. இது உழவர் திருநாளும் ஆகும்.. முன்பெல்லாம் வீட்டிற்கு நான்கு உழவு மாடுகள் இருக்கும்.. இப்போது அந்த இனம் மெதுவாய் அழிந்துகொண்டு வருகிறது.
இனி வரும் சந்ததி உழவின் அருமை உணர அரசு ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் மாட்டுப்பண்ணை உருவாக்கி அதில் ஆர்வமுள்ள இளைஞர்களின் வசம் ஒப்படைக்கலாம்.
பாதுகாக்கவேண்டிய காளை மாடுகளை பராமரிக்க இனவிருத்தி உருவாக வங்கிகள் மூலம் கடன் கொடுத்து ஊக்கமளிக்கலாம்.
நம் கலாச்சாரம் நம் குழந்தைகள் மெதுவாக மறந்துவிடும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. வெறும் பெயரில் மட்டும் நம் தமிழ் வாழ்ந்துவிடாது என்பதும் உண்மை." என்று சேரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சேரனின் இந்த பதிவுக்கு பாக்கியராஜ் என்ற இளைஞர் கொடுத்த பின்னூட்டத்தில், "விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மட்டுமே உலகத்தை காப்பாற்ற முடியும். அதை பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
நான் என்னுடைய பங்களிப்பை எனது கிராமத்து விவசாயிகளுக்கு சிறிய அளவில் செய்து வருகிறேன். உழவர் திருநாள் வாழ்த்துக்கள்" என்று அந்த இளைஞர் தெரிவித்தார். இதற்க்கு இயக்குனர் சேரன் தனது பாராட்டுகளை தெரிவிக்கும் விதமாக கைதட்டும் ஸ்மய்லியை போட்டுள்ளார்.
English Summary
director cheran twit for mattu pongal