'தளபதி 69' படத்தை நான் தான் இயக்குகிறேன் - மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே படக்குழுவினர் இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோட் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்ததாக நடிகர் விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு அவர் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இந்த நிலையில், இயக்குனர் எச்.வினோத் 'தளபதி 69' படத்தை நான் தான் இயக்குகிறேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இது அரசியல் படம் அல்ல, கமர்ஷியல் படம் தான் என்றுத் தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director h vinoth announce direct thalapathi 69 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->