கொள்ளையடிக்கப்பட்ட தேசிய விருது... இயக்குனர் மணிகண்டன் வீட்டு முகப்பில் காத்திருந்த பேரதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


'கடைசி விவசாயி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். 

இவர் தனது குடும்பத்துடன் மதுரை, உசிலம்பட்டியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்த திரைப்படத்தின் பணிக்காக குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருந்தார். 

அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அவர் வீட்டிற்குள் நுழைந்து ரூ. 1 லட்சம், 5 சவரன் நகை மற்றும் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக அவர் பெற்ற இரண்டு தேசிய விருது பதக்கங்களை திருடி சென்றனர். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திருடு போனது தேசிய விருது என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முகப்பில் ஒரு பை கிடந்தது. அதில், திருடிய வெள்ளி பதக்கங்களுடன் 'ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்... உங்கள் உழைப்பு உங்களுக்கு' என என்ற குறிப்பு இருந்தது. இதனை வைத்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Manikandan National Award Robbed issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->