இயக்குனர் மோகனை கைது செய்த முறை சட்டவிரோதம்! சொந்த ஜாமினில் விடுவித்த நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


திருச்சி: திரைப்பட இயக்குநர் மோகனை கைது செய்த முறை சட்ட விரோதம் என்று, அவரை சொந்த பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புகார் குறித்து வழக்குப் பதிவு செய்தது சரி என்றும், ஆனால் கைது செய்த முறை சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி  திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி,  அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் சுட்டிக்காட்டியிருந்தார். 

இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் இயக்குனர் ஜி.மோகன் கூறியிருந்தார். 

இந்த நிலையில், எந்த வித குற்றமும் செய்யாத நிலையில், சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்படார்.   

அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை தெரிவிக்காமலையே காவல்துறை சட்டவிரோதமாக செயலப்பது அம்பலமானது. 

எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் மோகனை கைது செய்த முறை சட்ட விரோதம் என்று, அவரை சொந்த பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Mohan G Own Bail Release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->