என்.ஐ.ஏ. சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல்!
NIA Raid Tamilnadu Hameed Hussain
தமிழகத்தின் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினரான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, நீலாங்கரை, ஏழுகிணறு, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், என்.ஐ.ஏ. சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமீது ஹுசைன் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஹமீது ஹுசைன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
English Summary
NIA Raid Tamilnadu Hameed Hussain