சிகரெட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.. இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு.!
Director mysskin speech about smoking cigarettes
சிகரெட் பிடிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்று இயக்குனர் மிஸ்கின் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தின் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், ரமணா மற்றும் நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் மிஸ்கின் தனது அடுத்த படத்திற்கான கதை எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் தன்னை பார்க்க வந்ததாகவும் அதில் அருகில் அமர்ந்த ஒரு நபர் தான் இயக்குனர் என்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் முகத்தைப் பார்த்ததும் அவர் நிறைய சிகரெட் பிடிப்பவர் என்று எனக்குத் தெரிந்தது. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் முதல் படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன்.
அந்த அளவுக்கு டென்ஷன் இருந்தால் தான் இயக்குனர். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் சிகரெட் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Director mysskin speech about smoking cigarettes