என்னோட அடுத்தபடம் இதுதான் - மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நெல்சன், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அதன்படி இந்தப்படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படம் தான் தனது அடுத்த படம் என்று தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் ரஜினி, நெல்சன், ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' திரைப்படம் தொடங்கும் என்றும், விரைவில் இந்தப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director nelson announce jailer 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->