வெய்ட்டிங்.... அஜித் பட இயக்குனருடன் தளபதி 69.? பத்திரிகையாளர் கொடுத்த மாஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி இருக்கிறது.

இந்தத் திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் படம் என்பதாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் லோகேஷ் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது என்பதாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

விஜய் எப்போதுமே தனது படத்தின்  படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்து விட்டால்  அடுத்த படத்தைப் பற்றிய கதை விவாதங்கள் மற்றும் இயக்குனரை தேர்வு செய்தல் ஆகியவற்றில் இறங்கி விடுவார். இதன்படி லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில் தனது 68 ஆவது படத்தில் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து விஜயின் 69 ஆவது படத்தை அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய எச். வினோத் இயக்கயிருப்பதாக  பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார். எச். வினோத், லோகேஷ் கனகராஜ் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற தரமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இதனால் தளபதி அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விஜய், அஜித் பட இயக்குனருடன் இணைந்து பணியாற்ற மாட்டார் என்றும் அஜித் விஜய் பணியாற்றிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டார் என்றும்  சினிமா வட்டாரங்களில் ஒரு செய்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக எச் வினோத்  மற்றும் தளபதி கூட்டணி அமைவது சந்தேகமே என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director of Thalapathy 69 the mass update given by the journalist


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->