பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல; புதிய அமைதியாகவும் பிறக்கலாம் - நடிகர் பாரத்திபன்!
Division is not only grief may the new peace be born actor parthiban
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார். இந்த பிரிவு அறிவிப்பு இந்திய சினிமாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் முப்பது வயதை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது என்றும், கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…குடைக்குள் மழை’ நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல , புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Division is not only grief may the new peace be born actor parthiban