68 வயது.. 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. கோடிக் கணக்கில் சம்பளம்.. இந்தியாவின் மிக பணக்கார காமெடி நடிகர் யார் தெரியுமா..?! - Seithipunal
Seithipunal


இந்தியத் திரையுலகில் மிக முக்கிய காமெடி நட்சத்திரமாக இன்றளவும் பயணித்து வரும் நடிகர், 1956ம் ஆண்டு பிறந்து, தனது 20 ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தவர், இன்று தனது 68 ஆவது வயதிலும் திரையுலகில் ஜொலித்து வருகிறார். 

அவர் தான் ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து வரும் பிரம்மானந்தம். இவர் கடந்த 1986ம் ஆண்டு தான் ஒரு தெலுங்குப் படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து தற்போது வரை தொய்வில்லாமல் அவர் சுமார் 1000 திரைப்படங்களைக் கடந்து நடித்து வருகிறார். மேலும் இதற்காக அவர் ஒரு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 

தனது 68 ஆவது வயதிலும் மிகவும் பிசியாக இருக்கும் பிரம்மானந்தம் நடிப்பில் 30 படங்கள் வரையில் கூட ஒரே வருடத்தில் வெளியாகியுள்ளன. அப்படிப்பட்ட காமெடி ஜாம்பவானான இவர் தமிழில் எஸ். ஜே. சூர்யாவின் நியூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து கில்லி, மொழி, ஜில்லா உள்ளிட்ட தமிழின் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள "இந்தியன் 2" திரைப்படத்திலும் பிரம்மானந்தம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஒரு படத்திற்கு 2.5 கோடி வரை சம்பளம் பெறுவதாக தெரிய வந்துள்ளது. 

பிரம்மானந்தம் இதுவரை காமெடியனாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், இந்தியாவிலேயே மிகவும் பணக்கார காமெடியன் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவரது சொத்து மதிப்பு சுமார் 490 கோடி என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிரம்மானந்தம் நடிப்பைத் தாண்டியும் திறமையானவர் எனபதற்கு இவர் மிக தத்ரூபமாக வரையும் ஓவியங்களே சாட்சி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do u Know Who is Indias Most Rich Comedy Actor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->