உதயநிதி ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா?...நடிகர் சங்கத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றம்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அப்போது தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கிடையே நடிகர் சங்கக் கட்டிடம் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் கட்டப்படும் நிலையில், இதற்கு தேவையான 12 கோடி ரூபாய் வங்கிக் கடன் டெபாசிட் தொகைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியதோடு, தனது நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, சங்க கட்டிடத்துக்காக கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து நிர்வாகிகள் பாராட்டி பேசினர்.

மேலும், வங்கி வைப்புத் தொகைக்காக பெரும் நிதி திரட்டிட ஏற்பாடு செய்தமைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do you know what udayanidhi stalin did the resolution was passed in the actors union


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->