அதிக தேசிய விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Do you know who is the most nationally awarded music composer
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுத்து தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் பின்னணி இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு , தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தில், சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதினை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மேலும் 1996-ம் ஆண்டு வெளியான மின்சாரக்கனவு திரைப்படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 2-வது முறையாக பெற்றார்.
பாலிவுட்டில் 2001-ம் ஆண்டு வெளியான லகான் திரைப்படத்திற்காக சிறந்த இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெற்றார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மேலும் ஏ.ஆர் ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகள், 7 தேசிய விருதுகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று ஆசியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
English Summary
Do you know who is the most nationally awarded music composer