நடிகர் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் வருகிற 13-ந்தேதி  பட்டமளிப்பு விழா, நடைபெறுகிறது. இந்த விழா பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார். அப்போது அவருடைய கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. 

இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor award to actor ramsaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->