தி கேரளா ஸ்டோரி பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறாரா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுதிப்டோசென், இறுதியாக இயக்கிய தி கேரளா ஸ்டோரிஸ் படம், அம்மாநிலத்தை , சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

தென்னிந்தியாவில் பெருசா பேசப்படாத இந்தப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. மொத்தம் ரூ.240 கோடி வரை இந்தப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது .

இதைத்தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் தன்னுடைய, அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் “எனது அடுத்த படம் இந்தியாவில் சுமார் ஐம்பது ஆண்டுகள் தாண்டி செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது. இந்தப் படத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் விபுல் ஷாவுக்காக இயக்கவுள்ளேன். அவருடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை இசை பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Does Ar Rahman join with Sudhiptosen next project


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->