'என் பையனுக்கு ஒன்னுனா விட்டத தொட்டுத்தானே ஆகணும்'; 'குட் பேட் அஃலி' ட்ரெய்லர் சம்பவம் ரெடி..!
Trailer release of the movie Good Bad Ugly
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இன்னும் பட வெளியாக 06 நாட்கள் உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 02-வது பாடலான 'காட் பிளஸ் யூ' வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். தற்போது, 'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி கொண்டாடிவருகின்றனர்.
English Summary
Trailer release of the movie Good Bad Ugly