06-ஆம் தேதி முதலமைச்சர் ஊட்டிக்கு செல்லவுள்ள நிலையில், நாளை கோவை விஜயம்..!
The Chief Minister is going to visit Ooty on the 6th
தமிழ்நாடு மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் 06-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் விஜயம் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை 10 மணிக்கு கோவை சென்று, அங்கிருந்து ஊட்டி செல்லவுள்ளார்.
06 ஆம் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதோடு, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். அதன் பின்னர் அங்கு சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சி தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நீலகிரியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
English Summary
The Chief Minister is going to visit Ooty on the 6th