18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனை; அசத்திய ஹர்திக் பாண்ட்யா..! - Seithipunal
Seithipunal


இன்று லக்னோவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், மார்க்ரம் 53 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்த போட்டியில் மும்பைஅணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் 04 ஓவர்கள் பந்து வீசி 36 ரன்களை கொடுத்து 05 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 05 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இந்நிலையில், 20 என்ற வெற்றி இலக்கை களமிறங்கிய மும்பை அணி 6.4 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hardik Pandya has achieved a feat that no captain has ever achieved in the 18 year history of IPL


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->