"இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம்" PS-2 மேடையில் துரைமுருகனின் சுவாரஸ்ய உரை.!  - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய், ரேவதி, சுஹாசினி, குஷ்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். 

மேலும், இதில், சிம்பு, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய துரைமுருகன், "பொன்னியின் செல்வன் வரலாற்றுக் கதையை எனது கல்லூரி காலத்தில் நான் 5 முறை படித்து இருக்கின்றேன். அது படமாக வெளியாகி பார்த்தபோது நான் பிரமித்து விட்டேன். மணி ரத்தினத்தால் இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று எண்ணி அவருக்கு வாழ்த்து சொன்னேன்.

ஆரம்பத்தின் மனிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக கேள்வி பட்ட போது, அவர் இருட்டிலேயே படம் எடுப்பவராச்சே.? இதெல்லாம் வொர்க்கவுட் ஆகுமா என்று கூறினேன். எனக்கு புத்தகம் படித்ததிலிருந்தே வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தின் மேல் பிரியம் மிக அதிகம். எனது தொகுதியில் இருக்கும் திருவலம் தான் வந்தியத்தேவனின் ஊரு. 

எனவே, எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கு உலக நாயகன் கமல் வந்துள்ளார். திரையுலகில் இன்றைக்கும் அவருக்கு இணையான நடிகர் எவருமில்லை." என்று பிரியத்தை வெளிப்படுத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan speech about Ps 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->