எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஜான்சிராணி விலகல்.? ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

அதன்படி கரிகாலன் கதாபாத்திரத்தின் அம்மாவாக ஜான்சி ராணி என்ற கேரக்டரில் நடித்து வரும் காயத்ரி கிருஷ்ணன். சின்னத்துறையில் தொகுப்பாளினியாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காயத்ரி நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் வாய்ப்புகளைத் தேடி உள்ளார்.

ஆனால் அவரது தோற்றத்தை காரணம் காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. அயலி என்ற வெப் தொடரில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றதன் மூலம் சன் டிவி எதிர்நீச்சல் தொடரிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்தில் நடிக்க உள்ளார். இதனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக காயத்ரி கிருஷ்ணன் எதிர்நீச்சல் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ethirneechal johnsi rani quiet in seriel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->