எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.! - Seithipunal
Seithipunal


எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

சன் டிவியில் வெளியாகும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த தொடரில் வரும் சில கதாபாத்திரங்களும் ரசிகர்களின் விருப்பமாக இருந்துள்ளது. 

அந்த வகையில், இந்தத் தொடரில் ஆதி குணசேகரனாக ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து சமீபத்தில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த அதிர்ச்சியிலிருந்து, இன்னும் சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வெளிவராமல் உள்ள சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, அதே எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்பிரியா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ethirneechal serial actor haripriya admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->