புகழ் நடிக்கும் Four சிக்னல் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் புகழ்,  'குக் வித் கோமாளி' 'காமெடி ராஜா கலக்கல் ராணி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.

 கடந்த சில ஆண்டுகளாக இவர் அயோத்தி, சபாபதி, வாய்மை, யானை' உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தற்போது 'மிஸ்டர் ஜு கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது இவர் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனரான மகேஸ்வரன்கேசவன் இயக்கும் இப்படத்திற்கு 'Four சிக்னல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த படம் நகரங்களில் வசிக்கும் சாதாரணமான பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போர்ஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fame Starring Four Signal First Look Poster Released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->