சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்..மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு! - Seithipunal
Seithipunal


சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க அவரது  மனைவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி போராடி வந்தார்.அதுமட்டுமல்லாமல் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார்.இந்தநிலையில் இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்நிலையில்சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதாக ஜகபர் அலியின் மனைவி மரியம் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து  அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கிளை சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஜகபர் அலி மனைவி மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கில் கூறியதாவது:-கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை இதுவரை வழங்கவில்லை என்றும் உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என குறிப்பிடிருந்தார் .மேலும்  10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் . முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.மேலும்   ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக்  ஜகபர் அலி மனைவி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social activist Jakabar Alis body should be exhumed and examined. Madurai High Court Bench


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->